இடைத்தேர்தலில் அ.தி.மு.க., வெல்லும்: இபிஎஸ் நம்பிக்கை
சென்னை: ''மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெறும்,'' என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்
சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளும், ஏற்கனவே, அ.தி.மு.க., வெற்றி பெற்ற தொகுதிகள்; அ.தி.மு.க.,வுக்கு செல்வாக்குள்ள தொகுதிகள். எனவே, இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.








