Politics
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கரூர்:கரூர் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலாளர் கமலகண்ணன் தலைமையில், கட்சி அலுவலகத்தில் நடந்தது.
அதில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை ராஜினாமா செய்ய வைத்து, அவர்களுக்கே இடைத்தேர்தலில் சீட் வழங்கி, ஊழல் ஆட்சிக்கு வழி வகுத்த, த.வெ.க., அரசை கண்டிப்பது, தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டை சரி செய்ய வேண்டும், தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர்கள் வெற்றிக்கு பணியாற்றுவது, துாய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவது, முதலீடுகளை ஈர்ப்பதாக கூறி லண்டனில் சொகுசு பயணம் சென்ற முதல்வர் விஜயை கண்டிப்பது, தனியார் பல்கலை கழக மசோதாவை நிறைவேற்றிய த.வெ.க., அரசை கண்டிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், மாநில அமைப்பு செயலாளர் சின்னசாமி, மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, துணை செயலாளர்கள் மல்லிகா, முத்து, பொருளாளார் கண்ணதாசன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
