Politics
அ.தி.மு.க.,வில் இடைத்தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு, பெயர்களை குறிப்பிடாமல், தேர்தல் பொறுப்பாளர்களை அ.தி.மு.க., அறிவித்துள்ளது.
'மதுராந்தகம் தொகுதிக்கு, செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 33 கட்சி மாவட்டங்கள்; தாராபுரம் தொகுதிக்கு, திருப்பூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள 24 கட்சி மாவட்டங்கள் ஆகியவற்றின் மாவட்ட செயலர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள், தேர்தல் பணியாற்றுவர்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
பெயர் குறிப்பிடாமல் பொறுப்பாளர்களை அறிவித்தது பற்றி, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறுகையில், ''முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சண்முகம் போன்றோர் தனித்து செயல்படும் நிலையில், பெயரை குறிப்பிட்டால், சிலர் மறுக்கலாம். ''இது, தேர்தல் பணியை பாதிக்கும் என்பதால், பெயர் குறிப்பிடாமல், பொறுப்பாளர்களை பழனிசாமி நியமித்துள்ளார்,'' என்றனர்.