அகற்றப்படுமா - மாநில, தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கூடலுார், செப். 10 மாவட்டத்தில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் தேசிய, மாநில நெடுஞ்சாலையில் உள்ள
மாவட்டத்தில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் தேசிய, மாநில நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள திருமண மண்டபங்களில் வாகன நிறுத்த வசதி செய்யாததால் வாகனங்களை ரோட்டில் நிறுத்துவதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ளது தேனி மாவட்டம். மாவட்டத்தின் துவக்கப்பகுதியான கூடலுாரில் புறவழிச்சாலையும், தெற்கு மந்தை வாய்க்காலில் இருந்து வடக்கு போலீஸ் ஸ்டேஷன் வரை 4. கி.மீ., தூர மாநில நெடுஞ்சாலைத்துறை ரோடு உள்ளது. 2022 ல் மாநில நெடுஞ்சாலை இருவழிச்சாலையாக அகலப்படுத்தி சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது. கேரளா எல்லையில் அமைந்துள்ளதால் வாகன போக்குவரத்து அதிகம். தினந்தோறும் சுருளி அருவி, தேக்கடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களும் அதிகமாக இவ்வழியே செல்கின்றன.
புறவழிச்சாலை அமைத்து, மாநில நெடுஞ்சாலை அகலப்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைத்த போதிலும் முழுமையாக ஆக்கிரமிப்புகள் அகற்றாததால் கடந்த சில மாதங்களாக விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது.


