நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் அடுத்த ஆண்டிற்குள் அகற்றப்படும்
கூடலுார், செப். 11- கூடலுார் மாநில நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அடுத்த ஆண்டிற்குள் முழுமையாக
கூடலுார் மாநில நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அடுத்த ஆண்டிற்குள் முழுமையாக அகற்றப்படும் என நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் குமணன் தெரிவித்தார்.
கூடலுார் நகர்ப் பகுதியில் உள்ள 4 கி.மீ. தூர மாநில நெடுஞ்சாலைத்துறை ரோடு 2022ல் அகலப்படுத்தப்பட்டது. இருவழிச் சாலையாக அமைத்து சென்டர் மீடியனும் அமைக்கப்பட்டுள்ளது. முழுமையாக ஆக்கிரமிப்புகள் அகற்றாத நிலையில் மீண்டும் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. இதனால் விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளது.
நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் குமணன், கூடலுார் ஆய்வாளர் மாளிகை அருகே நெடுஞ்சாலைக்கு சொந்தமான பகுதியில் சோலைக்குள் கூடல் அமைப்பினரால் நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகளை பார்வையிட்டார்.
அதன்பின் அவர் கூறியதாவது: தன்னார்வலர்கள் மரக்கன்றுகள் வைப்பது மகிழ்ச்சியை தருகிறது. இது போன்று பல இடங்களில் மரக்கன்றுகளை வைத்தால் நெடுஞ்சாலை பசுமையாக மாறும். கூடலுார் மாநில நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. அடுத்த ஆண்டுக்குள் முழுமையாக அகற்றப்படும், என்றார்.