கோவில்களின் சொத்து விபரங்களை 3 மாதத்திற்குள் வெளியிட வேண்டும் மாநில தகவல் ஆணையம் உத்தரவு
சென்னை: 'தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களின் சொத்துக்கள், வாடகை விபரங்கள் மற்றும் நிர்வாகம் தொடர்பான தகவல்களை, மூன்று மாதங்களுக்குள் இணையதளத்திலும், கோவில் அறிவிப்பு பலகைகளிலும் வெளியிட வேண்டும்' என, ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனருக்கு, மாநில தகவல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சென்னை, மந்தைவெளிப்பாக்கத்தை சேர்ந்தவர் ரவிசங்கர். இவர், தகவல் அறியும் சட்டத்தின் கீழ், சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளிட்ட சில விபரங்களை கேட்டு விண்ணப்பித்தார்.
இந்த மனுவை விசாரித்த, தகவல் ஆணையர் இளம்பரிதி வெளியிட்ட உத்தரவு:





