வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு - கேரள முன்னாள் டி.ஜி.பி.க்கு 4 ஆண்டுகள் சிறை
திருவனந்தபுரம்,வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கில், கேரள மாநிலத்தின் முன்னாள் டி.ஜி.பி. டோமின் ஜே.தச்சங்கரிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வித
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கில், கேரள மாநிலத்தின் முன்னாள் டி.ஜி.பி. டோமின் ஜே.தச்சங்கரிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோட்டயம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளத்தில் டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள அதிகாரி ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட்ட முதல் வழக்கு இதுவாகும்.
மேலும், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான அவருக்கு 30.84 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை தொடர்ந்து, தச்சங்கரியை திருவனந்தபுரத்தில் உள்ள பூஜப்புரா மத்திய சிறைக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அங்கிருந்தபடி அவர் கேரள ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான இறுதிக்கட்ட விசாரணையின்போது, தண்டனையை அறிவிக்கும்போது தனது உடல்நிலையைக் கருத்தில் கொள்ளுமாறு தச்சங்கரி நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். இருப்பினும், அவர் வகித்த பதவியைக் கருத்தில் கொண்டு எந்த விதமான சலுகையும் அளிக்கப்படக் கூடாது என்று அரசுத் தரப்பு வாதிட்டது.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

