அளவுக்கதிகமான சொத்து 'மாஜி' டி.ஜி.பி.,க்கு '4 ஆண்டு'
கோட்டயம்:வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், கேரள முன்னாள் போலீஸ் டி.ஜி.பி., டோமின்
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், கேரள முன்னாள் போலீஸ் டி.ஜி.பி., டோமின் தச்சங்கரிக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்து கோட்டயம் ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் போலீஸ் டி.ஜி.பி.,யாக இருந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி டோமின் ஜே.தச்சங்கரி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு கோட்டயம் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
எர்ணாகுளத்தில் உள்ள ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், தச்சங்கரி, 2003 - 07 வரையிலான காலத்தில் வருமானத்தை விட 135.80 சதவீதம் அதிகமாக, அதாவது 64 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் குவித்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் 23 சாட்சிகள், 96 அரசு தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டன.
விசாரணை முடிந்து நீதிபதி ரஜனீஸ் நேற்று அளித்த தீர்ப்பில், முன்னாள் டி.ஜி.பி., டோமின் தச்சங்கரிக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனையும், 30.84 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தனர். டி.ஜி.பி.,அந்தஸ்திலான அதிகாரி ஒருவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சிறை தண்டனை பெறுவது இதுவே முதல் முறை.