வீணாகும் காகிதம் - 5 அடி விநாயகர் வரை... அரசு பள்ளி மாணவர்களின் அசத்தல் முயற்சி..!
புதுச்சேரி காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவர்கள், பயன்படுத்திய சுமார் 30 கிலோ காகிதங்களைக் கொண்டு 5 அடி உயர விநாயகர் சிலையை உருவாக்கி அசத்தியுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பயன்படுத்திய காகிதங்களைக் கொண்டு 5 அடி உயர விநாயகர் சிலையை உருவாக்கி ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.
ரசாயனப் பொருட்கள் எதுவும் பயன்படுத்தாமல் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மட்டுமின்றி ஆரோக்கியமான உணவு மற்றும் விளையாட்டின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.


