வேலூர்: திடீர் மாரடைப்பு.. உயிர் பிரியும் தறுவாயிலும் பயணிகளைக் காப்பாற்றிய அரசுப் பேருந்து ஓட்டுநர்
அரசுப் பேருந்தை இயக்கிக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிர் பிரியும் தறுவாயிலும் பயணிகளைக் காப்பாற்றிய தருணம் நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. | government bus driver saves passengers even as he suffered by sudden heart attack
பேருந்தை இயக்கிக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிர் பிரியும் தறுவாயிலும் பயணிகளைக் காப்பாற்றிய தருணம் நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.
வேலூர் அருகேயுள்ள காட்பாடி சில்க் மில் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடசாமி (வயது 59). இவர், பேரணாம்பட்டு பணிமனையில் இருந்து குடியாத்தம், வேலூர், திருப்பத்தூர், அரூர் வழித்தடத்தில் சேலம் வரை இயக்கப்படும் அரசு விரைவு பேருந்தின் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார்.
வழக்கம்போல் இன்று காலை 8 மணிக்குப் பணிக்குவந்த வெங்கடசாமி பணிமனையில் இருந்து பேருந்தை இயக்கிக் கொண்டு புறப்பட்டார்.





