Politics
25 பயணியரை காப்பாற்றி உயிரை விட்ட பஸ் டிரைவர்

பேரணாம்பட்டு: வேலுார் மாவட்டம், கழிஞ்சூரை சேர்ந்தவர் வெங்கடசாமி, 59. பேரணாம்பட்டு அரசு போக்கு வரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றினார். இவர், நேற்று காலை, 8:30 மணிக்கு, பேரணாம் பட்டிலிருந்து, 25க்கும் மேற்பட்ட பயணியரை ஏற்றிக்கொண்டு, குடியாத்தம் வழியாக சேலம் செல்லும் பஸ்சை ஓட்டி சென்றார்.
பஸ், குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே சென்றபோது, வெங்கடசாமிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே சாமர்த்தியமாக சாலையோரத்தில் பஸ்சை நிறுத்திய வெங்கடசாமி, 'ஸ்டியரிங்' மீது சாய்ந்த படி உயிரிழந்தார். குடியாத்தம் போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இறக்கும் தருவாயில், பஸ்சில் பயணித்த, 25 பயணியரின் உயிரை காப்பாற்றிய வெங்கட சாமியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.