புதுச்சேரிக்கு வருகிறாரா கைலாசா நித்யானந்தா?
புதுச்சேரி: புதுச்சேரி, ஏம்பலத்தில், கைலாசா நித்யானந்தா தியான பீடத்திற்கு குடமுழுக்கு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தியான பீட நிர்வாகிகள், புதுச்சேரி சட்டசபையில், முதல்வர் ரங்கசாமியை நேற்று சந்தித்து பேசினர்.
தியான பீட குடமுழுக்கு விழாவில் பங்கேற்க, புதுச்சேரிக்கு நித்யானந்தா வருகை தர உள்ளதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக, மத்திய அரசிடம் பேசி வருவதாகவும், நித்யானந்தா புதுச்சேரி வரும்போது, மாநில அரசு பாதுகாப்பு தர வேண்டும் என்றும், முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதைக் கேட்ட ரங்கசாமி, 'அவர் வரட்டும் பார்த்துக்கலாம்' என, தெரிவித்தார். அவருக்கு, கைலாசா சிறப்புகள் அடங்கிய புத்தகத்தையும், தியான பீட நிர்வாகிகள் வழங்கினர்.



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

