Politics
“கைலாசா எங்கே தெரியுமா?” திடீரென வீடியோ வெளியிட்ட நித்தியானந்தா சொன்ன பரபரப்பு தகவல்!

முன்னதாக நித்தியானந்தா புதுச்சேரி வர உள்ளதாகவும் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும் அவரது சீடர்கள் முதலமைச்சர் ரங்கசாமியிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்தியானந்தா கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் அமைத்து புகழ்பெற்றார். புகழுக்கு ஏற்ப பல்வேறு வழக்குகள் மற்றும் சர்ச்சைகளும் நித்தியானந்தாவை சுற்றி எப்போதும் வட்டமடித்து வருகின்றன.
நித்தியானந்தா மீது ஆட்கடத்தல், கொள்ளை, ஏமாற்றுதல், கற்பழிப்பு என்று பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சிறை வாழ்க்கைக்கு பயந்து கடந்த 2016 ஆம் ஆண்டு தலைமறைவானார்.
அதன்பின் கைலாசா என்றொரு நாட்டை உருவாக்கி விட்டதாக கூறி அவ்வப்போது வீடியோ வெளியிட்டு வந்தார். அண்மைக்காலமாக நித்தியானாந்தா வீடியோ வெளியாகாத நிலையில் அவர் ஜீவசாமதி அடைந்து விட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் திடீரென வீடியோ ஒன்றை வெளியிட்ட நித்தியானந்தா, மேற்கு ஆப்பிரிக்கா அருகே அட்லாண்டிக் பெருங்கடலோரம் கினியா பிசாவ்வில் என்ற இடத்தில் கைலாசா இருப்பதாகவும் அங்கு வர விரும்புவோர் அதற்கான புகலிடப் பணிகளில் ஈடுபடுமாறும் கூறி உள்ளார்.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
