டெங்கு தடுப்பு நடவடிக்கை: 1,200 பழைய டயர் அகற்றம்
சேலம்; பருவமழையை முன்னிட்டு சேலம் மாநகராட்-சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 60 வார்டுகளிலும், 780 களப்பணியாளர்கள் வீடுகள் தோறும் சென்று தண்ணீர் தேங்கியுள்ளதை அகற்றி, 'அபேட்' மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்-றனர்.
அத்துடன், 4 வாகனங்கள், 22 இயந்திரங்கள் மூலம் தினமும் கொசு மருந்து அடிக்கும் பணி நடக்கிறது. தவிர மாநகராட்சிக்கு உட்பட்ட பல்-வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி கொசுப்புழு உற்பத்தியாகும் நிலையில் கிடந்த, 1,200 பழைய டயர்களை, மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினர்.இந்நிலையில் அழகா புரத்தில் கட்டப்பட்டு வரும் பார்த்திபன் என்பவரது வீட்டில் மாநகர நல அலுவலர் ராம்குமார் ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு தேங்கியிருந்த நீரில் அதிக அளவில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்-டதால், வீட்டின் உரிமையாளருக்கு, 10,000 அப-ராதம் விதிக்கப்பட்டது.

