டெங்கு தடுப்பு நடவடிக்கை: 1,200 பழைய டயர் அகற்றம்
சேலம்; பருவமழையை முன்னிட்டு சேலம் மாநகராட்-சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 60 வார்டுகளிலும், 780 களப்பணியாளர்கள் வீடுகள் தோறும் சென்று தண்ணீர் தேங்கியுள்ளதை அகற்றி, 'அபேட்' மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்-றனர்.
அத்துடன், 4 வாகனங்கள், 22 இயந்திரங்கள் மூலம் தினமும் கொசு மருந்து அடிக்கும் பணி நடக்கிறது. தவிர மாநகராட்சிக்கு உட்பட்ட பல்-வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி கொசுப்புழு உற்பத்தியாகும் நிலையில் கிடந்த, 1,200 பழைய டயர்களை, மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினர்.இந்நிலையில் அழகா புரத்தில் கட்டப்பட்டு வரும் பார்த்திபன் என்பவரது வீட்டில் மாநகர நல அலுவலர் ராம்குமார் ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு தேங்கியிருந்த நீரில் அதிக அளவில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்-டதால், வீட்டின் உரிமையாளருக்கு, 10,000 அப-ராதம் விதிக்கப்பட்டது.
மேலும் குகை, காட்டுவளவில் டெங்கு தடுப்பு பணிகளை ஆய்வு செய்த பின், மாநகராட்சி கமி-ஷனர் லலித் ஆதித்ய நீலம் கூறியதாவது:
வீடுகள், மாடிகள், காலி மனைகளில் மழைநீர் தேங்கும்படி தேவையற்ற பொருட்களை உடனே மக்கள் அப்புறப்படுத்த வேண்டும். தண்ணீர் தொட்டிகளை பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தமாக கழுவி கொசுக்கள் புகாதபடி மூடி வைக்க வேண்டும். கொசு ஒழிப்பு பணிகளுக்கு, மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தவறினால் பொது சுகாதார சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்-படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேட்டூர் நகராட்சி, 14வது வார்டு, அங்குள்ள கால்வாய் கரையோரம் உள்ளது. அந்த வார்டு மக்கள், கால்வாய் கரையோரம் குப்பை கொட்டினர்.
அவற்றை, நகராட்சி சுகாதார ஊழியர்கள் நேற்று காலை அகற்றினர். தொடர்ந்து, அங்கு இரு மரக்-கன்றுகளை நட்டனர்.
இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் பிரபாகரன் கூறுகையில், ''வீதிகளில் மக்கள் குப்பை கொட்-டாமல் இருக்க வழிப்புணர்வு ஏற்படுத்தும்படி மரக்கன்று நட்டுள்ளோம். மக்கள் குப்பையை தரம் பிரித்து, துாய்மை பணியாளரிடம் ஒப்படைக்க வேண்டும். சாலையோரம் குப்பை கொட்டுவோ-ருக்கு அபராதம் விதிக்கப்படும்.'' என்றார்.
பருவ நிலை மாற்றத்தால், நாழிக்கல்பட்டி ஊராட்சியில் சிலர், வைரஸ் காய்ச்சலால் பாதிக்-கப்பட்டனர். இதனால் நேற்று, அங்குள்ள கிராமங்-களில் ஒட்டுமொத்த துாய்மை, சுகாதார பணி-களை, ஊராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர்.
பொது இடங்களில் தேங்கிய குப்பையை அகற்றி, பிளீச்சிங் பவுடர் தெளித்தனர். மழைநீர் தேங்கிய இடங்களில் மருந்து ஊற்றி கொசுப்புழு உற்பத்தியை அழித்தனர். மக்களுக்கு வினியோ-கிக்கப்படும் குடிநீரில், குளோரின் அளவை ஒன்-றிய அதிகாரிகள் சரிபார்த்தனர். இப்பணிகளை உதவி திட்ட அலுவலர் சரவணன், பனமரத்துப்-பட்டி கமிஷனர் பழனிசாமி, பி.டி.ஓ., கார்த்திக் உள்ளிட்டோர் பார்வையிட்டு, ஊராட்சி பணியா-ளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.