டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!
இன்றைய அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிலைபெற்றது.
மும்பை: அதிகரித்து வரும் அந்நிய முதலீட்டு வரத்து உள்ளிட்டவையால் ஏற்பட்ட சாதகமான சூழலால், இன்றைய அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிலைபெற்றது.
வலுவான அந்நிய மூலதன வரத்தும் மற்றும் ரிசர்வ் வங்கியின் தீவிர தலையீடும் ரூபாயின் மதிப்பை வலுவடைய வைத்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். இருப்பினும், கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றங்கள் ரூபாயின் உயர்வை சற்று கட்டுப்படுத்தியது.


