Economy, business and finance
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 28 காசுகள் சரிந்து ரூ. 94.84 ஆக நிறைவு!

இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், இந்திய ரூபாய் மதிப்பு 28 காசுகள் சரிந்து ரூ. 94.84 ஆக நிலைபெற்றது.
மும்பை: மேற்கு ஆசியாவில் நிலவும் அரசியல் பதற்றங்கள் மற்றும் பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 1.45 சதவீதம் உயர்ந்து 99 டாலரை நெருங்குவது ஆகிய உயர்வுகள் முதலீட்டாளர்களின் கடுமையாக பாதித்ததால், இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 28 காசுகள் சரிந்து ரூ. 94.84 ஆக நிலைபெற்றது.
ஏமன் - ஹவுதிகளால் அராம்கோ நிறுவனத்தின் ஆலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்ததால், இந்திய ரூபாய் சரிந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் அரசியல் பதற்றங்கள் மற்றும் உள்நாட்டுப் பங்குகளில் நிலவிய பலவீனமான போக்கு ஆகியவை ரூபாயின் வீழ்ச்சிக்கு வெகுவாக வித்திட்டது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ. 94.49 ஆக தொடங்கி, பிறகு அதிகபட்சமாக ரூ. 94.49 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ. 94.89 ஐ எட்டியது. இறுதியில், நேற்றைய வர்த்தக நாள் முடிவிலிருந்து 28 காசுகள் சரிந்து ரூ. 94.84 ஆக நிலைபெற்றது.
The rupee fell 28 paise to close at 94.84 against the American currency on Tuesday.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.