இந்திய டி20 அணியில் முதல் 3 பேட்டர்கள் இவர்கள்தான்... ரஹானே சொன்ன 3 வீரர்கள் யார்?
புதுடெல்லி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில், சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோரையே முதல் மூன்று பேட்டிங் வரிசையில் களமிறக்க வேண்டும்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில், சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோரையே முதல் மூன்று பேட்டிங் வரிசையில் களமிறக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் அஜின்கியா ரஹானே தெரிவித்துள்ளார்.
2026 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றியில் சஞ்சு சாம்சன் முக்கிய பங்கு வகித்தார். அந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய அவர், 'தொடர் நாயகன்' விருதையும் வென்றார்.
எனினும், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சில போட்டிகளில் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து சாம்சன் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து மான்செஸ்டரில் நடைபெற்ற போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.






