Sport
ஆப்கனுக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படுவாரா?

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படுவாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை (செப்டம்பர் 13) முதல் தொடங்குகிறது. தில்லியில் உள்ள அருண் ஜெட்லி திடலில் நாளை முதல் டி20 போட்டி நடைபெறுகிறது.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் நான்கு பேர் இருப்பதால், அவர்களில் யார் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறக்கப்படப் போகிறார்கள் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களுக்கான வரிசையில் அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகியோர் உள்ளனர்.
இந்த நிலையில், முதல் டி20 போட்டியில் இந்திய அணிக்காக சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் விவேக் ரஸ்தான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அவரது இடத்திலிருந்து மாறி 4-வது வீரராக களமிறங்க வேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில், டாப் 3 இடத்துக்கு ஏற்கனவே நான்கு வீரர்கள் உள்ளனர். அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி மற்றும் இஷான் கிஷன் உள்ளனர். ஆனால், அவர்கள் அனைவருமே இடதுகை பேட்டர்கள். அதேபோல, அணியில் நிறைய இடதுகை பேட்டர்கள் உள்ளனர்.
வலதுகை பேட்டர் ஒருவர் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும் என்பதற்காக ஒருவரை தேர்வு செய்ய வேண்டியதில்லை என நினைக்கிறேன். அந்த பேட்டர் யார்? அவர் எப்படி விளையாடியிருக்கிறார்? என்பதுதான் மிகவும் முக்கியம். சில மாதங்களுக்கு முன்பாக சஞ்சு சாம்சன் 200 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 300 ரன்களுக்கும் அதிகமாக எடுத்து நமக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்தார். அவர் மிகவும் சிறந்த வீரர். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் சஞ்சு சாம்சனை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க வேண்டும் என்றார்.
Fans are wondering whether Sanju Samson will open the batting in the T20 series against Afghanistan.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.