வெளிநாட்டில் முதுகலைப்படிப்பு படிக்க ரூ.36 லட்சம் உதவித்தொகை
கோவை: வெளிநாடுகளில் முதுகலை படிப்பு படிக்கும் சிறுபான்மையின மாணவர்கள் 10 பேருக்கு தலா அதிகபட்சம் ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
2026--–27 கல்வியாண்டில் உலகளாவிய தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலை அல்லது கல்வி நிறுவனத்தில் இருந்து நிபந்தனையற்ற அட்மிஷன் லெட்டர் பெற வேண்டும். பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண், பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
மருத்துவம், இன்ஜினியரிங், மேலாண்மை, அறிவியல், வணிகவியல், நிதி, மனிதநேயம், கலை, வேளாண்மை அறிவியல், சமூக அறிவியல், சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் முதுகலை படிக்க விண்ணப்பிக்கலாம்.




