Education
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை
விழுப்புரம்: மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு;
மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., – ஐ.ஐ.எம்., – ஐ.ஐ.ஐ.டி., –என்.ஐ.டி., மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபு இன மாணவ, மாணவிகள் 2026-–27 ஆம் கல்வி ஆண்டிற்கான புதியது
மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
மாணவர்கள் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள இப்பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு, கற்பிப்பு கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம் மற்றும் இதர கட்டாய கட்டணங்கள் அல்லது ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
விண்ணப்பங்கள் சென்னை பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், கலெக்டர் அலுவலகம் (மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம்) அல்லது www.bcw.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வி நிறுவனம் பரிந்துரை செய்து, சம்பந்தப்பட்ட நலத்துறைக்கு அனுப்ப வேண்டும். புதுப்பித்தல் விண்ணப்பங்கள் வரும் அக்., 31ம் தேதிக்குள்ளும், புதிய விண்ணப்பங்கள் நவ., 30ம் தேதிக்குள்ளும் அனுப்ப வேண்டும். செமஸ்ட்டர் கட்டண ரசீதுகள் ஜன., 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.