Education
இஸ்லாமிய மாணவர்கள்விண்ணப்பிக்கலாம்
தேனி, செப்.16–மாநில அரசு சார்பில் வெளிநாடுகள் சென்று படிக்கும் 10 இஸ்லாமிய மாணவர்களுக்கு அதிகபட்சமாக தலா ரூ.36 லட்சம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில் வெளிநாட்டில் முதுகலைபடிப்பு பயில செல்லும் மாணவ,மாணவிகள் விண்ணப்பிக்கலாம். சர்வதேச தரவரிசையில் 250 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ள கல்வி நிறுவனங்களிடமிருந்து நிபந்தனையற்ற சேர்க்கை கடிதம் பெற்றிருக்க வேண்டும்.பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மேலும் விபரங்கள், விண்ணப்பத்தை www.bcmbcmw.tn.gov.in/welfschememinorities.htm என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அக்., 15க்குள் ‘ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால், பாரம்பரிய கட்டடம்முதல தளம், சேப்பாக்கம், சென்னை 600 005’ என்ற முகவரிக்கு அனுப்புமாறு கலெக்டர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.