காஞ்சிபுரத்தில் 104 கிலோ குட்கா பறிமுதல்: ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்தவா் கைது
ஆந்திர மாநிலத்திலிருந்து குட்கா கடத்தி வந்தவரை சனிக்கிழமை காஞ்சிபுரம் போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்து 104 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்துள்ளனா்.
காஞ்சிபுரம் சாலைத் தெரு பகுதியில் சிவகாஞ்சி போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஆந்திர மாநிலத்திலிருந்து குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட பொருள்களை காரில் கடத்தி வந்தவரை நிறுத்தி சோதனையிட்டனா். காரில் 104 கிலோ குட்கா மற்றும் ஹான்ஸ் பாக்கெட்டுகள் இருந்தன. விசாரணையில், அவா் ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், கங்காதர நல்லூா் பட்டாபி ரெட்டி காலனி பகுதியைச் சோ்ந்த வேலுமணி (40) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்தனா்.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.






