குட்கா கடத்திய 4 பேர் கைது
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அருகே பெங்களூருவில் இருந்து குட்கா பொருட்கள் கடத்தி வந்த சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கண்டாச்சிபுரம், முகையூர் குறுக்கு ரோடு அருகே இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை 5:00 மணியளவில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து இருந்து கண்டாச்சிபுரம் வழியாக வந்த மினி சரக்கு வேன் மற்றும் கார் ஆகியவற்றை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது இரண்டு வாகனங்களிலும் 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை 4 பேர் கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில், பெங்களூரு, கலாசிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மகன் விஜயகுமார், 32; பிரகாஷ், 30; விழுப்புரம் மாவட்டம் பிடாகம் பகுதியைச் சேர்ந்த ரஜினி மகன் ராஜா, 24; மற்றும் 17 வயது சிறுவன் என தெரியவந்தது.
உடன் 4 பேர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்து, குட்கா பொருட்கள், வேன் மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர்.