திரவுபதி அம்மன் கோயில் பூ வளர்ப்பு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி விழாவை முன்னிட்டு நேற்று இரவு பூ வளர்க்கும் நிகழ்வு நடந்தது. முன்னதாக மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, சிவாச்சாரியார்களால் பூ வளர்ப்பு நடந்தது. பூ வளர்ப்பிற்குரிய விறகு கட்டைகளை பக்தர்கள் காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
பூ வளர்ப்பு நிகழ்வை காண்பதற்கு சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இரவு முழுவதும் கோயிலில் இருந்து தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோயில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. முக்கிய விழாவான பூக்குழி விழா இன்று(செப்.,5) அதிகாலை நடப்பதால் விழா ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.


