Arts, culture, entertainment and media
திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி விழா
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழா, ஆக.14 ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. சக்தி
ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழா, ஆக.14 ல், கொடியேற்றத்துடன் துவங்கியது.
சக்தி கரகம், தர்மர் பிறப்பு, கிருஷ்ணர் பிறப்பு, திரவுபதி திருக்கல்யாணம், சக்ரா பர்ணகோட்டை, அபிமன்யு பிறப்பு, தவசு -கடப்பலி, படுகளம் உள்ளிட்டவை நடந்தது. நேற்று காலையில் பூக்குழி விழாவில் விரதம் இருந்த பக்தர்கள், அரசூரணி குளக்கரையில் புனித நீராடி, அங்கிருந்து ஊர்வலமாக சென்று கோயில் முன்பு தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். மூலவருக்கு அபிேஷகம் அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. 25 நாட்கள் நடைபெறும் விழாவின் தொடர்ச்சியாக, இன்று (செப்.6 ல்) மஞ்சள் நீராடுதல் விழா நடைபெற்று, செப்.8 ல் நடைபெறும் பட்டாபிஷேக விழாவுடன் விழா நிறைவடைகிறது.