Arts, culture, entertainment and media
திரவுபதி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழாவை முன்னிட்டு, மூலவர் அம்மனுக்கு மாலை மஞ்சள் நீராட்டுதல் விழா நடந்தது.
முன்னதாக, மூலவர் அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மஞ்சள் மூலம் மஞ்சள் அபிஷேகம் செய்யப்பட்டது. அம்மனுக்கு அபிஷேகம் செய்த மஞ்சள் பெண் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பின்பு நடைபெற்ற தீபாராதனையில், பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.