அகதியை அடிக்க பாய்ந்த அதிகாரி
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மண்டபம் முகாமில், 800க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் உள்ளனர். இவர்களுக்கு அகதிகள் மறுவாழ்வுத்துறை மூலம் அரிசி, பருப்பு, நிவாரண உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த முகாமை, தனி துணை கலெக்டர் கலைமன்னன் நிர்வகித்து வருகிறார்.
உடல்நலம் பாதித்த அகதி ஜெகநாதன், 50, சிகிச்சை பெற, துணை கலெக்டரிடம் இரு நாட்கள் விடுப்பு கேட்டு மனு கொடுத்தார். விடுப்பு கொடுக்க அவர் மறுத்ததால் உயர் அதிகாரியிடம் ஜெகநாதன் புகாரளித்தார்.
நேற்று, துணை கலெக்டரை ஜெகநாதன் நேரில் சந்தித்து விடுமுறை குறித்து முறையிட்டார். ஆத்திரமடைந்த துணை கலெக்டர், ஜெகநாதனை திட்டி, 'செருப்பால் அடிப்பேன்' என, அடிக்க பாய்ந்தார். இந்த வீடியோ இணையத்தில் பரவியது.




