Politics
துணை கலெக்டரை கைது செய்யக்கோரி நா.த.க., மனு
ராமநாதபுரம்: மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கி உள்ள இலங்கை அகதி ஜெகநாதன் என்பவர் தனித்துணை
மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கி உள்ள இலங்கை அகதி ஜெகநாதன் என்பவர் தனித்துணை கலெக்டர் கலை மன்னனிடம் விடுமுறை கேட்க சென்றார்.
அப்போது அவர் செருப்பால் அடிப்பேன் எனக் கூறிய சம்பவம் வீடியோவாக வெளியானது. அதைத் தொடர்ந்து கலை மன்னனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி கலெக்டர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டார். இந்நிலையில் நா.த.க. மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்குளம் ராசு தலைமையிலான நிர்வாகிகள் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணனிடம், கலை மன்னன் மீது சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என மனு அளித்தனர். –––