இலவச கண் சிகிச்சை முகாம் 200 பேர் பங்கேற்பு
பந்தலூர்: பந்தலூரில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமில், 200 பேர் பங்கேற்று பயன் அடைந்தனர். நீலகிரி மாவட்ட
பந்தலூரில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமில், 200 பேர் பங்கேற்று பயன் அடைந்தனர்.
நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கூடலூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஷாலோம் சாரிடபிள் டிரஸ்ட், மகாத்மா காந்தி பொது சேவை மையம் இணைந்து பந்தலூரில், இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் இலவச கண் கண்ணாடிகள் வழங்கும் முகாமினை நடத்தினார்கள்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் சிவசுப்பிரமணியம் வரவேற்றார். ஊட்டி அரசு மருத்துவமனை கண் மருத்துவர் திலீப் மணிகண்டன் தலைமை வகித்து, கண் பரிசோதனை மற்றும் கண்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், பார்வை திறனை சீராக வைத்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விளக்கிப் பேசினார்.


