கண் அறுவை சிகிச்சைக்கு முகாமில் 54 பேர் தேர்வு
மேட்டூர்: சேலம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், தனியார் கண் மருத்துவமனை, தனியார் கல்லுாரி உள்ளிட்டவை சார்பில், மேச்-சேரி, வெள்ளாறு ஊராட்சி வசந்தம் நகர், ராமபக்த ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில், இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடந்-தது.
கோவில் நிறுவனர் ஆறுமுகம் தொடங்கிவைத்தார். 135 பேர் சிகிச்சை பெற்றனர். அவர்களில், 54 பேர் கண் புரை, பார்வை கோளாறு அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்-டனர். 14 பேருக்கு கிட்டப்பார்வை, துாரப்பார்வை கோளாறு தடுக்க, கண்ணாடி இலவசமாக வழங்கப்பட்டன.