இலவச கண் சிகிச்சை முகாம்
ராசிபுரம்:ரோட்டரி சங்கம், சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில்,
சங்கம், சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு
சங்கம் சார்பில், இலவச கண் பரிசோதனை ராசிபுரத்தில் நடந்தது.
தலைவர் சதாசிவம் தலைமை வகித்தார். செயலாளர் நமச்சிவாயம் வரவேற்றார்.
மண்டல உதவி ஆளுனர் கருணாகர பன்னீர்செல்வம், டாக்டர் ராமகிருஷ்ணன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்ணில் நீர் வடிதல், கிட்டப்பார்வை, துாரப்பார்வை உள்ளிட்ட கண்
சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு,
மருந்து, மாத்திரை இலவசமாக வழங்கப்பட்டது. மேலும், அறுவை
சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள், சேலம் அழைத்து
செல்லப்பட்டனர்.