பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுடன் இன்று மோதல்... தொடருமா இந்தியாவின் ஆதிக்கம்?
சென்னை, பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானை இந்தியா சந்திக்கிறது. 8 அணிகள்8 அணிகள் இடையிலான 10-வது பெண்கள் ஆசிய க
8 அணிகள் இடையிலான 10-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள 7 முறை சாம்பியனான இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் தாய்லாந்தையும், 2-வது ஆட்டத்தில் ஹாங்காங்கையும் வீழ்த்தி அரையிறுதியை எட்டியது.
இந்த நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் பரம எதிரியான பாகிஸ்தானுடன் இன்று மோதுகிறது.













