Sport
ஆசிய கோப்பை அரையிறுதி: ஷஃபாலி வர்மா அரைசதம்; வங்கதேசத்துக்கு 150 ரன்கள் இலக்கு!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்துள்ளது.
பந்தை சிக்ஸருக்கு விளாசும் ஷஃபாலி வர்மா - படம் | பிசிசிஐ
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.
ஷஃபாலி வர்மா அரைசதம்; வங்கதேசத்துக்கு 150 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 40 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 24* ரன்கள், ரிச்சா கோஷ் 21 ரன்கள், பிரதீகா ராவல் 20 ரன்கள் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
வங்கதேசம் தரப்பில் சுல்தானா கட்டூன் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மரூஃபா அக்தர், நஹிதா அக்தர், ரபேயா கான் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேச அணி விளையாடி வருகிறது.
Batting first in the Asia Cup cricket semi-final against Bangladesh, the Indian team scored 149 runs for the loss of 6 wickets.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.