Sport
ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் துபை சர்வதேச திடலில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
இந்தியா அபார பந்துவீச்சு; 55 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்!
பாகிஸ்தான் அணியில் தொடக்க வீராங்கனைகள் தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். தொடக்க வீராங்கனைகளான முனீபா அலி 13 ரன்களும், ஷாவல் ஷுல்ஃபிகர் 14 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி 18.1 ஓவர்களில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்ரீ சரணி மற்றும் பிரேமா ராவத் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். தீப்தி சர்மா இரண்டு விக்கெட்டுகளையும், ஷஃபாலி வர்மா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இந்தியா அபார வெற்றி!
56 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 8.4 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியில் தொடக்க வீராங்கனைகளான ஷஃபாலி வர்மா 12 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 9 ரன்களும் எடுத்தனர். பிரதீகா ராவல் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 18 பந்துகளில் 18 ரன்களும், தீப்தி சர்மா 14 பந்துகளில் 12 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் கேப்டன் ஃபாத்திமா சனா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
The Indian team achieved a magnificent victory by 7 wickets against Pakistan in the Asia Cup cricket tournament.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.