TATA: ``எங்களுக்கு எந்தப் பயனுமில்லை..." - டாடா நிறுவனத்தை மூட கென்யா அதிபர் முடிவு!
கென்யாவில் டாடா கெமிக்கல்ஸ் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த அதிபர் வில்லியம் ரூட்டோ உத்தரவிட்டிருக்கிறார்.| President William Ruto has ordered the immediate suspension of Tata Chemicals' operations in Kenya.
கென்யாவில் TATA கெமிக்கல்ஸ் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த அதிபர் வில்லியம் ரூட்டோ உத்தரவிட்டிருக்கிறார்.
கென்யாவில் இயங்கி வரும் இந்தியாவின் டாடா கெமிக்கல்ஸ் (Tata Chemicals) நிறுவனம் தனது அனைத்து செயல்பாடுகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ உத்தரவிட்டுள்ளார்.
தெற்கு கென்யாவின் காஜியாடோ (Kajiado) மாவட்டத்திற்கு உட்பட்ட மகாடி பகுதிக்குச் சென்ற அதிபர் ரூட்டோ, பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, `` டாடா நிறுவனம் சுமார் 100 ஆண்டுகால ஒப்பந்தத்தைக் கொண்டிருந்தது. ஆனால், காஜியாடோ பகுதியில் அவர்கள் எந்த ஒரு தொழிற்சாலையையோ வளர்ச்சித் திட்டங்களையோ கட்டமைக்கவில்லை.


