Economy, business and finance
கென்ய விதிகளை மீறவில்லை: டாடா கெமிக்கல்ஸ் விளக்கம்

புதுடில்லி: கென்யாவில் மாகடி சோடா ஆஷ் சுரங்க செயல்பாட்டில் இருந்து வெளியேற டாடா கெமிக்கல் நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தங்களது கென்ய துணை நிறுவனம் அனைத்து விதிகளையும் முழுமையாக பின்பற்றுவதாக அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
இது குறித்து பங்கு சந்தைகளிடம் டாடா கெமிக்கல்ஸ் அளித்த அறிக்கை: செயல்பாடுகளை இடைநிறுத்தம் செய்யுமாறு டாடா கெமிக்கல்ஸ் மாகடி லிமிடெட் நிறுவனத்துக்கு, கென்ய சுரங்க அமைச்சகத்தின் உத்தரவு ஜூலை 28ம் தேதி கிடைத்தது. இதையடுத்து, அமைச்சகம் கோரிய அனைத்து தகவல்கள், அறிக்கைகள் மற்றும் ஆவணங்களையும் நிறுவனம் ஆகஸ்ட் 11ம் தேதி சமர்ப்பித்துள்ளது.
அடுத்தகட்ட உத்தரவுக்காக காத்திருக்கிறோம். உரிய சட்ட மற்றும் ஒழுங்குமுறை நடை முறைகள் வாயிலாக தீர்வு காண ஆக்கப்பூர்வமான பேச்சில் தொடர்ந்து ஈடுபடுகிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.
மாகாடி சுரங்கம் அமைந்துள்ள காஜியாடோ பகுதியில் போதுமான தொழில் கட்டமைப்புகளை டாடா கெமிக்கல்ஸ் உருவாக்கவில்லை என்று கூறி, கென்ய அதிபர் தடை விதித்தார்.


