ராமேஸ்வரத்தில் விரைவில் தொடங்குகிறது பயணிகள் படகு சேவை.. அக்னிதீர்த்தக் கடலில் இருந்து கடல் வழியாக மண்டபம் வரை வருகிறது பயணிகள் படகு சேவை...
ராமேஸ்வரம் அக்னிதீர்த்தக் கடற்கரையில் இருந்து பாம்பன் கால்வாய் வழியாக மண்டபம் வரை உள்நாட்டுப் பயணிகள் படகு சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், அக்னிதீர்த்தக் கடற்கரையில் இருந்து பாம்பன் கால்வாய் வழியாக மண்டபம் வரை உள்நாட்டுப் பயணிகள் படகு போக்குவரத்து சேவையை விரைவில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கான முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாக, சாலை மற்றும் ரயில் பாலங்களுக்கு கீழ் படகுகள் பாதுகாப்பாகச் சென்று வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து துறைமுக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
குறிப்பாக, செங்குத்தாக இயங்கும் ரயில் தூக்குப் பாலத்தின் கீழ் படகு கடந்து செல்லத் தேவையான உயரம் மற்றும் அப்பகுதியில் நிலவும் கடல் ஆழம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.



