ராமேஸ்வரம் --- பாம்பன் சுற்றுலா படகு சவாரி : அதிகாரிகள் ஆய்வு
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் - பாம்பன் கடல் வழியாக சுற்றுலா படகு சவாரி துவக்கிட தமிழ்நாடு கடல்சார் வாணிப கழக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
புனித தலமான ராமேஸ்வரம் முதல் பாம்பன் வரை கடல் வழியாக சுற்றுலா படகு சவாரி துவக்கிட தமிழக அரசு முடிவு செய்து ராமேஸ்வரத்தில் ரூ. 4 கோடி செலவில் சுற்றுலா பாலம் அமைத்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்சட்டசபையில் ராமேஸ்வரம்-- பாம்பன் இடையே சுற்றுலா படகு சவாரி துவக்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். அதன்படி நேற்று தமிழ்நாடு கடல்சார் வாணிபக் கழக அதிகாரிகள் குழு ராமேஸ்வரம் வருகை தந்தனர். இவர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து படகில் பாம்பன் வரை சென்று அப்பகுதியில் உள்ள குருசடை தீவு சுற்றுலா செல்லும் வழித்தடத்தை ஆய்வு செய்தனர். இதில் ராமேஸ்வரம் --- பாம்பன் வரை எந்த வகையான சுற்றுலா படகுகளை இயக்குவது குறித்து ஆய்வு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.