வானத்தின் கண் இஓஎஸ் - 05 வெற்றி! ஜிஎஸ்எல்வி எப்-17 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவியது இஸ்ரோ
ஸ்ரீஹரிகோட்டா : இந்தியாவின் புவி கண்காணிப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், இ.ஓ.எஸ்.-05 செயற்கைக்கோளை சுமந்து சென்ற ஜி.எஸ்.எல்.வி., எப்-17 ராக்கெட் இன்று அதிகாலை 2:55 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட ராக்கெட், 18 நிமிடங்கள் 34 வினாடிகள் பயணித்த நிலையில், தனது மூன்று நிலைகளையும் வெற்றிகரமாக கடந்து செயற்கைக்கோளை பிரித்தது. அதிகாலை 3:14 மணியளவில், 19.8 டிகிரி சாய்வுடன், பூமியில் இருந்து சுமார் 36 ஆயிரம் கி.மீ., உயரத்தில் உள்ள சுற்றுப்பாதையில் இ.ஓ.எஸ்.-05 நிலைநிறுத்தப்பட்டது.
பேரிடர்களை கண்காணிக்கும் 'கண்'






