Science and technology
இஸ்ரோவின் 'Naughty Boy' என GSLV ராக்கெட்டை அழைப்பது ஏன் தெரியுமா?

இஸ்ரோவின் Naughty Boy என்று அழைக்கப்படும் GSLV-F17 ராக்கெட் மூலம், புயல்கள், வெள்ளப்பெருக்கு, காட்டுத்தீ உள்ளிட்டவற்றை முன்கூட்டியே கண்காணிக்கும் EOS-05 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.
ஆந்திரப்பிரதேச மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவு தளத்திலிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 2:55 மணிக்கு GSLV-F17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இது EOS-05 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியது. கடந்த ஆண்டு மே மாதத்திலும், கடந்த ஜனவரியிலும் இஸ்ரோவின் முக்கிய ராக்கெட்டான PSLV தொடர் தோல்விகளைச் சந்தித்தது. மேலும், 2021ஆம் ஆண்டில் இதே போன்றதொரு GISAT-1 (EOS-03) ஏவப்பட்டபோது ஏற்பட்ட தோல்விக்கு தற்போது இந்த EOS-05 செயற்கைக்கோள் வெற்றிகரமாக மாற்றாக அமைந்துள்ளது.


