மதுரைக்கு ரூ.4,899... கோவைக்கு ரூ.6,154! ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளைக்கு அன்புமணி கண்டனம்
சென்னை,மதுரைக்கு ரூ.4,899... கோவைக்கு ரூ.6,154! ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளைக்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக
மதுரைக்கு ரூ.4,899... கோவைக்கு ரூ.6,154! ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளைக்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையையொட்டி சென்னையிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டிருக்கும் நிலையில், அதைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகள் வரலாறு காணாத கட்டணக் கொள்ளையில் ஈடுப்பட்டிருக்கின்றன. அதைத் தடுக்க வேண்டிய கடமையையும், பொறுப்பையும் கொண்ட தமிழக அரசு, இந்தக் கட்டணக் கொள்ளைக்கு எதிராக இதுவரை பெயரளவில் கூட எச்சரிக்கை விடுக்காதது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் வரும் 14-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளதையொட்டி அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய இரு நாள்களான சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் 3 நாள்கள் தொடர் விடுமுறையைக் கொண்டாடும் வகையில், வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வாழும் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதைப் பயன்படுத்திக் கொண்டு நாளை செப்டம்பர் 11-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் இருந்து புறப்படும் ஆம்னி பேருந்துகளில் திருச்சிக்கு ரூ.3,999 வரையிலும், மதுரைக்கு ரூ.4000 வரையிலும், கோவைக்கு ரூ.6154 வரையிலும் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.





/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)



