Politics
ஆம்னி பேருந்துகளில் வரலாறு காணாத கட்டணக் கொள்ளை - அன்புமணி ராமதாஸ்

விநாயகர் சதுர்த்தி சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை நாட்களில் மக்கள் சொந்த ஊருக்கு செல்வதை பயன்படுத்தி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுவரை இல்லாத அளவிற்கு கட்டண கொள்ளையில் ஈடுபட்டுள்ளதன் மூலம் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் திருச்சி சென்று வர 34 ஆயிரம் ரூபாய் வரை செலவழிக்க வேண்டும் எனவும், இது சொந்த ஊர் செல்லும் 90 விழுக்காட்டு மக்களின் மாத ஊதியத்தை விட அதிகமானது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஆம்னி பேருந்துகளுக்கான கட்டண நிர்ணய குழுவை நியமித்து கட்டண கொள்ளையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.