ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவை வலுப்படுத்தும் கனடா
ஒட்டாவா,டிரம்ப் மிரட்டல்அமெரிக்காவில் டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பேற்றது முதல், கனடாவுடன் கடுமையான வர்த்தகப் போர் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடைய
அமெரிக்காவில் டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பேற்றது முதல், கனடாவுடன் கடுமையான வர்த்தகப் போர் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பல கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகப் போர்கள் வெடித்துள்ளன. இதன் உச் சகட்டமாக, "உலகிலேயே மிக மோசமான நாடு கனடா, அவர்கள் இத்தனை காலம் அமெரிக்காவை ஏமாற்றிவிட்டார்கள்" என்று டிரம்ப் கடுமையாக விமர்சித்தார்.
மேலும், வரும் ஜனவரி மாதம் முதல் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் கார்கள் மற்றும் ஆட்டோ உதிரிபாகங்கள் மீது புதிய வரிகளை விதிக்கப் போவதாகவும் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, கனடா தற்போது ஐரோப்பாவை நோக்கித் திரும்பியுள்ளது.
கனடா, ஐரோப்பிய ஒன்றியத்தின் "துணை உறுப்பினர்” ஆகப் போவதாக செய்திகள் பரவின. இதற்கு விளக்கம் அளித்த கனடா பிரதமர் மார்க் கார்னி, “நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் முழு உறுப்பினராக இணையப் போவதில்லை. ஆனால், இரு தரப்புக்கும் இடையே முன்னெப்போதும் இல்லாத ஒரு பிரத்தியேக உத்திசார் கூட்டணியை உருவாக்கப் பேச்சுவார்த்தைகளை தொடங்க உள்ளோம்.




