ஏற்றுமதி வரிச்சலுகை திட்டம் 5 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் : வர்த்தக அமைச்சகம் கோரிக்கை
புதுடில்லி: ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி மற்றும் கட்டணங்களில் குறிப்பிட்ட அளவை திரும்ப வழங்கும் 'ரோடெப்' திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க, மத்திய வர்த்தக அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் ரோடெப் திட்டம், வரும் செப்., 30 உடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு தொடர்வது குறித்து, மத்திய செலவின துறையுடன் வர்த்தக அமைச்சகம் பேச்சு நடத்தி வருகிறது. மேலும், 2026 - 27 நிதியாண்டில் இத்திட்டத்திற்காக 23,000 கோடி ரூபாய் ஒதுக்குமாறும், மத்திய நிதி அமைச்சகத்திடம் வர்த்தக அமைச்சகம் கேட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.