Economy, business and finance
ஏற்றுமதி வரிச்சலுகை திட்டம் 5 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் : வர்த்தக அமைச்சகம் கோரிக்கை

புதுடில்லி: ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி மற்றும் கட்டணங்களில் குறிப்பிட்ட அளவை திரும்ப வழங்கும் 'ரோடெப்' திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க, மத்திய வர்த்தக அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் ரோடெப் திட்டம், வரும் செப்., 30 உடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு தொடர்வது குறித்து, மத்திய செலவின துறையுடன் வர்த்தக அமைச்சகம் பேச்சு நடத்தி வருகிறது. மேலும், 2026 - 27 நிதியாண்டில் இத்திட்டத்திற்காக 23,000 கோடி ரூபாய் ஒதுக்குமாறும், மத்திய நிதி அமைச்சகத்திடம் வர்த்தக அமைச்சகம் கேட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2021ல் அறிமுகப்படுத்தப்பட்ட ரோடெப் திட்டம், பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதற்கான போக்குவரத்து உள்ளிட்ட பணி களுக்கு, ஏற்றுமதியாளர்கள் செலுத்து ம் வரிகள் மற்றும் பிற கட்டணங்களை திரும்ப வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.
மத்திய, மாநில அல்லது உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்கனவே உள்ள எந்த திட்டத்தின் வாயிலாகவும் திரும்ப பெற முடியாத வரிகள் மற்றும் கட்டணங்கள் இதில் வழங்கப்படுகின்றன.