ராமேஸ்வரம் மீனவர்களுக்கு செப்.19 வரை சிறைக்காவல்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேருக்கு செப்.19 வரை சிறைக்காவலை நீட்டித்து இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராமேஸ்வரத்தில் இருந்து ஆக.5ல் மீன்பிடிக்க சென்ற மீனவர்களில், ஒரு விசைப்படகில் இருந்த 11 பேர் காற்றின் வேகத்தில் திசைமாறினர். இலங்கை நெடுந்தீவு பாறை மீது அவர்களின் படகு ஏறி நின்றது.
படகை மீட்க முடியாமல் போனதால் மீனவர்கள் 11 பேரையும் இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். வாய்தா நாளான நேற்று மீனவர்களை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.


