ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
ராமேஸ்வரம்: -நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை, இலங்கை கடற்படை வீரர்கள் விரட்டியடித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து செப்., 5ல், 360 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
இந்திய - இலங்கை எல்லையில் மீன்பிடித்த போது, இரு கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள், துப்பாக்கி காட்டி எச்சரித்து அவர்களை விரட்டினர்.
அதன்பின், ராமேஸ்வரம் கடல் பகுதியில் மீன்பிடித்து விட்டு, நேற்று காலை கரை திரும்பிய மீனவர்கள், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.