ராமேஸ்வரம் மீனவர்களுக்கு செப்.22 வரை சிறைக்காவல்
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேருக்கு செப்.22 வரை சிறைக் காவலை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆக.12ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் ஒரு படகில் இருந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். கோர்ட் வாய்தா நாளான நேற்று மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்களுக்கு செப்.22 வரை சிறைக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.