வடக்கு மாவட்ட காங்., நிர்வாகிகள் பதவிக்கு நேர்காணல்
செஞ்சி: விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., சார்பில் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் மண்டல அளவிலான புதிய நிர்வாகிகள் தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டங்கள் நடைபெற உள்ளன.
கடந்த, 1ம் தேதி செஞ்சியில் நடந்த கூட்டத்தில் பல்வேறு பதவிகளுக்கு மனு கொடுத்தவர்களிடம் மண்டல பொறுப்பாளர் பழனிசாமி, மாவட்ட பார்வையாளர் மோகன் குமார ராஜா ஆகியோர் நேர்காணல் இன்று 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடக்க உள்ளது.
இதன்படி இன்று காலை 10:00 மணிக்கு திண்டிவனத்திலும், மதியம் 2:30 மணிக்கு மரக்காணம் பகுதிக்கும், நாளை 7ம் தேதி காலை 10:00 மணிக்கு வல்லம் பகுதிக்கும், மதியம் 2:30 மணிக்கு மயிலத்திலும், 8-ம் தேதி காலை 10:00 மணிக்கு செஞ்சி ஒன்றியம், செஞ்சி நகரம், அனந்தபுரம் பேரூராட்சி பகுதிக்கும், மதியம் 2:30 மணிக்கு மேல்மலையனுார் பகுதிக்கும், 9 ம் தேதி காலை 10:00 மணிக்கு காணை பகுதிக்கும், மதியம் 2:30 மணிக்கு விக்கிரவாண்டி ஒன்றியம் மற்றும் நகரப்பகுதிக்கும், 10ம் தேதி காலை 10:00 மணிக்கு திண்டிவனம் நகரப்பகுதிக்கும் கூட்டம் நடைபெற உள்ளது.


